பொதுமுடக்கத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் பொதுமுடக்கம்அமலில் இருந்து வருகிறது. தற்போது வைரஸ் பரவல் குறைந்து வருவதால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், தமிழகத்தில் அமலில் உள்ள பொதுமுடக்கம் ஜூலை 19ஆம் தேதியுடம் முடிவடையும் நிலையில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலத்தில் நடைபெற்று வரும் ஆலோசனயில் தலைமைச் செயலர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.