தமிழ்நாடு

மேட்டூர் வரத் தொடங்கியது, கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர்

DIN

கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் பருவமழையின் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

கபினி நிரம்பிய நிலையில் உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 16 ஆம் தேதி முதல் காவிரியில் வினாடிக்கு 15,000 கனஅடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர் மட்டம் 96.94 அடியாக உயரந்த நிலையில் அணைக்கு வினாடிக்கு 21,800 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் அந்த அணையிலிருந்து வினாடிக்கு 2,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இரு அணைகளிலிருந்தும் வினாடிக்கு 17,500 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்று பகலில் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர் மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத்தொடங்கும். இதனால் காவிரி டெல்டா விவசாயிகளும் மேட்டூர் அணை மீனவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.87 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4,181 கனஅடிவீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு34.32 டி.எம்.சியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT