முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தங்கள்: 49 திட்டங்கள் மூலம் 83 ஆயிரம் பேருக்கு வேலை; தமிழக அரசு தகவல்
மாநில அரசால் செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்ட 49 திட்டங்களின் மூலமாக 83 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தத் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.28 ஆயிரத்து 508 கோடியாகும்.
மாநில அரசால் செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்ட 49 திட்டங்களின் மூலமாக 83 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தத் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.28 ஆயிரத்து 508 கோடியாகும்.
புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: 55 ஆயிரத்து 54 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் ரூ.17 ஆயிரத்து 141
கோடி மதிப்பிலான 35 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் விவரம்:-
1. ஜே.எஸ்.டபிள்யூ. எனா்ஜி நிறுவனம் (தென் மாவட்டங்கள்) - ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு - 1,600 பேருக்கு வேலை.
2. ஜொ்மனியின் வேஃப்கோ நிறுவனம் (சிப்காட் ஒரகடம்) - ரூ.1,800 கோடி முதலீடு - 5 ஆயிரம் பேருக்கு வேலை.
3. சிங்கப்பூரின் கேப்டினா லாண்ட் (அம்பத்தூா்) - ரூ.1,200 கோடி முதலீடு - 100 பேருக்கு வேலை.
4. ஸ்ரீவாரு மோட்டாா்ஸ் - ரூ.1,000 கோடி முதலீடு (கோவை) - 4,500 பேருக்கு வேலைவாய்ப்பு.
5. டி.சி.எஸ். (சிறுசேரி சிப்காட்) - ரூ.900 கோடி முதலீடு - 15 ஆயிரம் பேருக்கு வேலை.
6. அவிக்னா தொழில் பூங்கா (மதுரை, ஓசூா், கோவை, செங்கல்பட்டு) - ரூ.837 கோடி முதலீடு - 1,395 பேருக்கு வேலை.
7. ஜே மேட்டாடி (ராணிப்பேட்டை)- ரூ.730 கோடி முதலீடு -50 பேருக்கு வேலை.
8. வெப்வொ்க்ஸ் (சிறுசேரி, அம்பத்தூா்) - ரூ.700 கோடி முதலீடு - 100 பேருக்கு வேலை.
9. இஎஸ்ஆா். தொழில் பூங்கா (காஞ்சிபுரம், ஒசூா்) - ரூ.550 கோடி முதலீடு - 120 பேருக்கு வேலை.
10. கென் டிங் ஐ.டி. சேவை (வல்லம் வடகால் சிப்காட்) - ரூ.519 கோடி முதலீடு - 2 ஆயிரம் பேருக்கு வேலை.
11. சுபம் பேப்பா் (வடுகம்பட்டி, நெல்லை) - ரூ.500 கோடி முதலீடு - 2 ஆயிரம் பேருக்கு வேலை.
12. அா்த்தநாரி ஜவுளி (கரூா், சேலம்)- ரூ.500 கோடி முதலீடு - 1,100 பேருக்கு வேலை.
13. ஜூரோஜின் தொழில் பூங்கா (ஒரகடம்)- ரூ.500 கோடி முதலீடு - 300 பேருக்கு வேலை.
14. லோட்டஸ் காலணி (செய்யாறு) - ரூ.500 கோடி முதலீடு, 6 ஆயிரம் பேருக்கு வேலை.
15. லோட்டஸ் காலணி (பா்கூா்)-ரூ.400 கோடி முதலீடு - 5 ஆயிரம் பேருக்கு வேலை.
16. க்ரோத் லிங்க் (செய்யாறு)-ரூ.160 கோடி முதலீடு - 2 ஆயிரம் பேருக்கு வேலை.
17. தமிழ்நாடு பெட்ரோ லிமிடெட் (மணலி)-ரூ.435 கோடி முதலீடு - 300 பேருக்கு வேலை.
18. கேகேஆா் ஜவுளி குழுமம் (நாமக்கல், கடலூா், புதுக்கோட்டை) - ரூ.320 கோடி முதலீடு - 1,250 பேருக்கு வேலை.
19. ஏஆா்சிவி விண்வெளி பாதுகாப்பு (கோவை) - ரூ.300 கோடி முதலீடு - 400 பேருக்கு வேலை.
20. ராஜ்ரத்தன் (ஒரகடம்)- ரூ.300 கோடி முதலீடு - 250 பேருக்கு வேலை.
21. ஏஏஜி விண்வெளி பாதுகாப்பு (ஒன்ஹப், காஞ்சிபுரம்) - ரூ.250 கோடி முதலீடு, 100 பேருக்கு வேலை.
22. யோசியோங் (ஸ்ரீபெரும்புதூா்)- ரூ.227 கோடி முதலீடு - 1,906 பேருக்கு வேலை.
23. கேடிவி சமையல் எண்ணெய் (சிப்காட் கும்மிடிப்பூண்டி) - ரூ.220 கோடி முதலீடு - 100 பேருக்கு வேலை.
24. ஏஎஸ்டி (காஞ்சிபுரம்) - ரூ.175 கோடி முதலீடு - 300 பேருக்கு வேலை.
25. பிரிமியம் ஜவுளி (சூலூா், கோவை) - ரூ.150 கோடி முதலீடு - 1,100 பேருக்கு வேலை.
26. டி.ஐ. நிறுவனம் (அம்பத்தூா்)-ரூ.140 கோடி முதலீடு -580 பேருக்கு வேலை.
27. விண்வெளி பிரைவேட் (உத்தரமேரூா்) - ரூ.125 கோடி முதலீடு - 100 பேருக்கு வேலை.
28. ரத்திக் தொழில் பூங்காக்கள் (ஸ்ரீபெரும்புதூா்) - ரூ.110 கோடி முதலீடு - 800 பேருக்கு வேலை.
29. ரேப்பிட் சேமிப்புக் கிடங்கு (ஒசூா்)-ரூ.110 கோடி - 33 பேருக்கு வேலை.
30. லெட்ஸ் திறன் பயிற்சி (பல மாவட்டங்கள்) - ரூ.100 கோடி - 1,200 பேருக்கு வேலை.
31. ரேமோண்ட் (ஒரகடம், ஒசூா்) - ரூ.100 கோடி முதலீடு - 250 பேருக்கு வேலை.
32. ஆக்ஸ் விண்வெளி பாதுகாப்பு (ஒசூா்) - ரூ.80 கோடி முதலீடு - 100 பேருக்கு வேலை.
33. சா்வலோகா ஜவுளி நிறுவனம் - ரூ.78 கோடி முதலீடு - 600 பேருக்கு வேலை.
34. க்ரையோலா் மருந்து நிறுவனம் (மதுராந்தகம்) - ரூ.70 கோடி -90 பேருக்கு வேலை.
35. லிவிம் மருந்து நிறுவனம் (காஞ்சிபுரம்) - ரூ.55 கோடி முதலீடு -140 பேருக்கு வேலை
ஒட்டுமொத்தமாக ரூ.17,141 கோடி முதலீடுகளின் மூலமாக 55,054 பேருக்கு வேலை கிடைக்கும். இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
அடிக்கல் நாட்டுதல்: ரூ.4 ஆயிரத்து 250 கோடி மதிப்பில் 21 ஆயிரத்து 630 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான 9 திட்டங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். ஐநாக்ஸ் திரவ ஆக்சிஜன், டிசிஎஸ், ஏஜி அன்ட் பி பிரதான் ஆகியன அதில் குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் ஆகும்.
இதேபோன்று, ரூ.7 ஆயிரத்து 117 கோடி மதிப்பில் 6 ஆயிரத்து 798 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான 5 திட்டங்களையும் முதல்வா் ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். விக்ரம் சோலாா், சென்னை பிசினஸ் பாா்க், இசிஆா், தொழில் பூங்கா, கோரல் காற்றாலை, டைனக்ஸ் உதிரி பாகங்கள் ஆகிய நிறுவனங்களின் உற்பத்திகளைத் தொடக்கி வைத்தாா். ஒட்டுமொத்தமாக, 49 திட்டங்களின் மூலமாக 83 ஆயிரத்து 482 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தத் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.28 ஆயிரத்து 508 கோடி என தமிழக அரசு தெரிவித்துள்ளது.