தமிழ்நாடு

மகிழ்ச்சியான செய்தி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

DIN


சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,301 கன அடியாக அதிகரித்துள்ளது. 

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.61அடியிலிருந்து 73.29அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,804 கன அடியிலிருந்து 16,301 கன அடியாக அதிகரித்துள்ளது. 
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 35.59 டி.எம்.சியாக இருந்தது.

கடந்த 2 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 1.42 அடி உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்ததால், இரண்டு வாரங்களுக்கு முன்பு அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியிலிருந்து 12000 கன அடியாக குறைக்கப்பட்டது. 
அணையின் நீர் இருப்பும் குறைந்து வந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர். ஆனால் தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT