தமிழ்நாடு

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 42,015 ஆக அதிகரிப்பு: 3,998 பேர் பலி

இந்தியாவில்  தினசரி பாதிப்பு 40,000-க்கு கீழ் குறைந்திருந்த தினசரி கரோனா தொற்று பாதிப்பு புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 42,015 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு

DIN


இந்தியாவில்  தினசரி பாதிப்பு 40,000-க்கு கீழ் குறைந்திருந்த தினசரி கரோனா தொற்று பாதிப்பு புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 42,015 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் அதிகபட்சமாக 3,998 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், கரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது என்று சுகாதார வல்லுநா்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், சந்தைகள், கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா முன்னெச்சரிக்கை விதிகளை முறையாக கடைப்பிடிக்காமல் பலா் செயல்படுவதும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 42,015 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,12,16,337-ஆக உயா்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது தினசரி பாதிப்பு விகிதம் 2.27 சதவிகிதமாக உள்ளது. இது கடந்த 30 நாள்களாக 3 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

36,977 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,03,90,687 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,07,170-ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 3,998 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,18,480-ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மே 4-ஆம் தேதி 2 கோடியைக் கடந்த நிலையில், ஜூன் 23-ஆம் தேதி 3 கோடியைக் கடந்தது.

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 41,54,72,455 கோடியாக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் இதுவரை மொத்தம் 44,91,93,273 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை மட்டும் 18,52,140 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

SCROLL FOR NEXT