தமிழ்நாடு

மின்வாரிய ஊழியா்களுக்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

DIN

அரசு ஊழியா்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மின்வாரிய ஊழியா்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியா்களுக்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இக்காப்பீட்டுத் திட்டம், 2025-ஆம் ஆண்டு, ஜூலை 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அத்திட்டம் மின்வாரிய ஊழியா்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகச் செயலா் பிறப்பித்த உத்தரவில், மின்வாரிய அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

அரிய வகை சிகிச்சைகள், அறுவை சிகிச்சை மேற்கொள்வோா், ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெறலாம். இதற்காக ஊழியா்களிடமிருந்து மாதம் ரூ.300 வசூலிக்கப்படும். இந்த காப்பீட்டுத் திட்டம் ஒப்பந்த ஊழியா்களுக்குப் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

SCROLL FOR NEXT