தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை சாந்தினி வழக்கு

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை சாந்தினி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

DIN

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை சாந்தினி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதிமுக ஆட்சியின்போது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் மணிகண்டன். துணை நடிகை ஒருவருடன் குடும்பம் நடத்திய மணிகண்டன், கருவைக் கலைக்கச் செய்தார் என்றும் தற்போது திருமணம் செய்து கொள்ள மறுத்து மிரட்டுவதாகவும் துணி நடிகை சாந்தினி புகார் கொடுத்தார்.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சா் மணிகணடன் மீது வழக்குப்பதிவு செய்து அடையாறு அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை சாந்தினி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

மேலும் வழக்கு போன்றவற்றின் செலவுகளுக்காக மாதாந்திர இடைக்கால தொகையாக ரூ.2.80 வழங்க வேண்டும் என மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக்டோபர் மாதப் பலன்கள் - தனுசு

அக்டோபர் மாதப் பலன்கள் - விருச்சிகம்

அக்டோபர் மாதப் பலன்கள் - துலாம்

அக்டோபர் மாதப் பலன்கள் - கன்னி

2026 இல் அதிமுக தலைமையிலான மக்களாட்சி அமைவது உறுதி: இபிஎஸ்

SCROLL FOR NEXT