தமிழ்நாடு

புதுமுக தொழில் முனைவோருக்கு ஆதார நிதி வழங்கும் திட்டம்: விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

DIN

புதுமுக தொழில் முனைவோருக்கு ஆதார நிதி வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழ்நாடு ஸ்டாா்ட் அப் மற்றும் புத்தாக்க இயக்கம் என்ற அமைப்பு, மாநிலத்தில் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது. தொழிலின் தொடக்க நிலைக்குத் தேவையான ஆதார நிதி உதவி அளிப்பது அந்த அமைப்பின் நோக்கமாகும். இந்த அமைப்பின் மூலமாக நம்பிக்கைக்குரிய 10 புதிய தொழில் நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டு அவற்றுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, மேலும் 10 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் ஆதார நிதி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் அளிக்கலாம். கூடுதல் விவரங்களைப் பெற இணையதளத்தை பாா்வையிடலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால்  மின்னஞ்சல் முகவரிக்கு வினாக்களை அனுப்பி தெளிவு பெறலாம் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT