முகப்பு
தமிழ்நாடு

உதகை : ஜெனரேட்டர் புகையை சுவாசித்த இருவர் பலி 

உதகையில்  சோலூர் ஊரடி பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை ) இரவு நடைபெற்றுக் கொண்டிருந்த கோவில் திருவிழாவின் போது அங்கு மின்தடை ஏற்பட்டது

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
உதகை : ஜெனரேட்டர் புகையை சுவாசித்த இருவர் பலி 
பகிர்:

உதகையில்  சோலூர் ஓரடி பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை ) இரவு நடைபெற்றுக் கொண்டிருந்த கோவில் திருவிழாவின் போது அங்கு மின்தடை ஏற்பட்டது . இதனால் அப்பகுதியைச் சேர்ந்த 5 பேர் மோட்டார் ஜெனரேட்டர் இருக்கும் அறைக்குச்  சென்று அதை இயக்கினர். ஆனால்  எதிர்பாராத விதமாக திடீரென அதிலிருந்து வெளிப்பட்ட அதிக புகையின் காரணமாக  5 பேரும் அங்கேயே மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து அவர்களைக் காணவில்லை எனத்  தேடிய போது மின்சார ஜெனரேட்டர் அறையில் மூர்ச்சையாகிக் கிடந்த 5 பேரையும் மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் முன்பே  இறந்துவிட்டதாகவும் மற்றவர்களுக்குத்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.