முகப்பு
தமிழ்நாடு

9 முதல் +2 வகுப்பு வரை பள்ளிகள் திறக்க ஆலோசனை: அன்பில் மகேஷ்

9ஆம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடத்தி வருவதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
9 முதல் +2 வகுப்பு வரை பள்ளிகள் திறக்க ஆலோசனை: அன்பில் மகேஷ்
பகிர்:


தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடத்தி வருவதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த விளக்கம் அளித்தார்.

அதில், தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடத்தி வருவதாகவும், இது குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.

மேலும்  சிஎஸ்ஆர் சமூக பொறுப்பு நிதி மூலம் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. இதனால் பொது முடக்கத்திலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து அரசு பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →