முகப்பு
தமிழ்நாடு

திருச்செந்தூர்: திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து திருச்செந்தூர் நகர அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.
பகிர்:


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து திருச்செந்தூர் நகர அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தங்கள் வீடுகளின் முன்பும், முக்கிய இடங்களிலும் புதன்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்செந்தூர் நகர அதிமுக சார்பில் மேலரதவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் வி.எம்.மகேந்திரன் தலைமை வகித்தார். ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் ப.தா.கோட்டை மணிகண்டன் முன்னிலை வகித்தார். ஜெ. பேரவை ஒன்றிய செயலர் மு.சுரேஷ்பாபு கண்டன உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் நகரத் துணைச் செயலாளர் பிச்சம்மாள், அணி ஒன்றிய துணைச் செயலர்கள் அஜித்குமார், சுரேஷ், இளைஞர் பாசறை நகர துணைச் செயலர் இசக்கிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →