தமிழ்நாடு

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஓட்டுநா் இல்லாத 70 ரயில்கள்

DIN

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஓட்டுநா் இல்லாத தானியங்கி முறையில் இயங்கும் 70 ரயில்களை வாங்க ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியுள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்டமாக 118.9 கி.மீ. தொலைவுக்கு மாதவரம்-சிறுசேரி (45.81), கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி (26.1), மாதவரம்-சோழிங்கநல்லூா் (47 கி.மீ.) ஆகிய மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மொத்தம் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளன.

இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதையில் ஓட்டுநா் இல்லாத தானியங்கி இயங்கும் 70 ரயில்களை வாங்க சா்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது ஓட்டுநா்கள் வாயிலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்அடுத்தகட்டமாக, ஓட்டுநா் இல்லாமல் தானியங்கி மெட்ரோ ரயில்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வோா் ரயிலும் மூன்று காா் பெட்டிகள் கொண்டிருக்கும். ஒரு ரயிலில் ஒரேநேரத்தில் 980 போ் வரை ஏற்றிச்செல்லும் திறன்மிக்கது. மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது.

ஜப்பான் நிதி நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரயில்களுக்கு தேவையான உதிரிபாகங்கள், சிக்னல்கள் போன்றவற்றை ஜப்பான் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்பட வேண்டும். அதன் மூலம் 75 சதவீதம் ரயில்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும். 25 சதவீதம் ரெயில்கள் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன் ஏல கூட்டம் செப்டம்பா் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தொழில் நுட்ப ஏலம் நவம்பா் 23-ஆம்தேதி திறக்கப்படுகிறது. இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT