முகப்பு
தமிழ்நாடு

தமிழக அரசைப் பாராட்டிய விஜயகாந்த்

காவலர்களுக்கு வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
தமிழக அரசைப் பாராட்டிய விஜயகாந்த்
பகிர்:

காவலர்களுக்கு வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கவும், காவலர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாள்களில் விடுமுறை வழங்கவும் அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் எஸ்பிக்களை வலியுறுத்தியிருந்தார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில் தேமுதிக தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக காவல்துறையின் நீண்ட நாள் கோரிக்கையேற்று வாரத்தில் ஒருநாள், மேலும் பிறந்தநாள் மற்றும் திருமண நாளில் காவலர்களுக்கு விடுமுறை அறிவித்திருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் காவலர்களுக்கு விடுமுறை அறிவித்த டிஜிபி சைலேந்திர பாபுவுக்கும், தமிழக அரசுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் விஜயகாந்த் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →