ராஜகோபாலனை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ராஜகோபாலனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ராஜகோபாலனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் சென்னை கே.கே. நகா் தனியாா் பள்ளி ஆசிரியர் ராஜகோபால் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சில மாணவிகளும் இவர் மீது புகார் அளித்தனர்.
இந்நிலையில், ராஜகோபாலை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் அனுமதி கேட்கப்பட்டது.
போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் காவல்துறையினர் 5 நாள்கள் அனுமதி கோரிய நிலையில் 3 நாள்களுக்கு மட்டும் ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.