ஊரடங்கால் கரோனா பரவல் குறைவு: மு.க.ஸ்டாலின்
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு சென்னையில் படிப்படியாக கரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு சென்னையில் படிப்படியாக கரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ள விடியோவில்,
கோவை, ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களிலும் முழு ஊரடங்கால் கரோனா பாதிப்பு முன்பு இருந்ததை விட தற்போது குறைந்துள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற பாதுகாப்பு நடமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தாலே கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரலாம்.
முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றினால், கரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று கூறினார்.
ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை, படுக்கைகள் காலியாக உள்ளது. நாளொன்றுக்கு அதிக அளவிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று கூறினார்.