பிளஸ் 2 பொதுத்தேர்வு: 60% மக்கள் ஆதரவு எனத் தகவல் 
தமிழ்நாடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு: 60% மக்கள் ஆதரவு எனத் தகவல்

பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவதற்கு 60 சதவிகிதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவதற்கு 60 சதவிகிதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்தலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியியலாளர்கள், மருத்துவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

முதல் நாளான இன்று (ஜூன் 3) பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு ஆதரவாக பலரும், எதிராக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் 60 சதவிகிதம் மக்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு நடத்தக் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதனைத் தொடர்ந்து நாளையும் அனைத்துத் தரப்பினரிடமும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்படவுள்ளன.

அனைத்துத் தரப்பினரும் கருத்து தெரிவிப்பதற்காக தனி மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மின்னஞ்சல் முகவரி, 14417 என்ற தொலைபேசி உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணில் ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் மற்றும் கல்வியாளா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வை ரத்து செய்யலாமா? அல்லது நடத்தலாமா? என்பது குறித்த தங்களுடைய கருத்துகளை நாளைக்குள் (ஜூன்4) பதிவிடலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT