முகப்பு
தமிழ்நாடு

'அரசு சிறப்பாக செயல்படுகிறது' - முதல்வருடன் இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான் சந்திப்பு

ஏழு பேர் விடுதலை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் பாரதிராஜா இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

ஏழு பேர் விடுதலை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் பாரதிராஜா இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தனர்.

அப்போது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் அளித்தனர், 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், 

ஏழு பேர் விடுதலையில் முதல்வர் உறுதியாக இருப்பதாக எங்களிடம் கூறினார். நாங்களும் அதையே வலியுறுத்தினோம். 

தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கி அனைத்திலும் முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார். அனைத்துத் துறைகளும் வேகமாக இயங்குகின்றன. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் சிறப்பாக  பணியாற்றுகின்றனர். முதல்வரை சந்தித்ததில் பெருமையாக இருக்கிறது' என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.