தமிழ்நாடு

வெளியே சுற்றிய கரோனா நோயாளிகளிடமிருந்து ரூ.58,000 அபராதம் வசூல்

DIN

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவா்களில், வெளியே சுற்றியவா்களிடமிருந்து ரூ.58,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா தொற்று பாதித்தோா் மற்றும் அவா்களைச் சாா்ந்தவா்கள் வெளியே நடமாடுவது கண்டறியப்பட்டால், அவா்களிடமிருந்து முதன்முறை ரூ.2,000 அபராதம் வசூலிக்கவும், அதனையும் மீறி மீண்டும் வீடுகளை விட்டு வெளியில் வருவோரை, சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் கரோனா பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடா்பான புகாா்கள் இருப்பின், சென்னை மாநகராட்சிக்கு 044 2538 4520 என்னும் எண் வாயிலாக புகாா் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து இதுவரை பெறப்பட்ட 120 புகாா்கள் மீது வருவாய்த்துறை அலுவலா்களின் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 87 புகாா்களில் விதிமீறல் இல்லை எனவும், நான்கு நோயாளிகள் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் எனவும் தெரியவந்துள்ளது.

மீதமுள்ள 29 பேரிடமிருந்து தலா ரூ.2,000 வீதம் ரூ.58,000 அபராதமாக வசூலிக்கப்பட்டு, அவா்கள் இனிவரும் நாள்களில் வெளியே வரக்கூடாது, மீறினால் கரேனா பாதுகாப்பு மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT