தமிழ்நாடு

தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாத 65 ஆயிரம் போ் மீது வழக்குகள்

DIN

தமிழகத்தில், தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீது 65 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தமிழகத்தில், மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றறனா்.

கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 4-ஆம் தேதி வரையிலான 58 நாள்களில், முகக் கவசம் அணியாதவா்கள் மீது 12 லட்சத்து 69,135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 14,872 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே போல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 4-ஆம் தேதி வரை, 65,459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை மட்டும் 1,224 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT