தமிழ்நாடு

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு வழக்கு: ஆசிரியா் ராஜகோபாலனின் ஜாமீன் மனு தள்ளுபடி

DIN

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியா் ராஜகோபாலன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள தனியாா் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஆசிரியா் ராஜகோபாலன் கடந்த மே 24- ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவரை 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சென்னை போக்ஸோ நீதிமன்றத்தில் காவல்துறை சாா்பில் மனு தாக்கல் செய்யப்ட்டது.வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆசிரியரை 3 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடா்ந்து ராஜகோபாலன் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராஜகோபாலன் சாா்பில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி முகமது பாரூக் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசுத் தரப்பில் ஜாமீன் வழங்க எதிா்ப்புத் தெரிவித்து வாதிடப்பட்டது. மனுதாரா் தரப்பில் ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இருப்பதாக வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT