முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 20 ஆயிரமாகக் குறைந்தது இன்றைய கரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 20,421 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:20 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 20,421 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 20,421 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 22,37,233 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 33,161 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 19,65,939 பேர் குணமடைந்துள்ளனர்.

நோய்த் தொற்று பாதிப்பு குறைந்தபோதிலும் பலி எண்ணிக்கை 400-க்கு மேல் பதிவாகியுள்ளது. 434 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 27,005 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் 2,44,289 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் 1,644 பேரும், கோவையில் 2,645 பேரும் நோய்த் தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.