முகப்பு
தமிழ்நாடு

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 2 இலவச சக்கர நாற்காலிகள்

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு இலவசமாக 2 சக்கர நாற்காலிகள் வழங்கிய எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவன ஊழியர் சங்கத்தினர்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:20 AM
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை நோயாளிகள் பயன்பாட்டிற்கான 2 சக்கர நாற்காலிகளை இலவசமாக வழங்கிய எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவன ஊழியர்சங்கத்தினர். உடன் அரசு மருத்துவமனை தலைமை  மருத்துவர் மற்றும் ஊழியர்கள்.
பகிர்:

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவனையின் நோயாளிகள்  பயன்பாட்டிற்கான 2 சக்கர நாற்காலிகளை நகரின் எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் சங்கத்தினர் திங்கள் கிழமை அம்மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.

அருப்புக்கோட்டையில் உள்ள எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் தீவிர நோயாளிகள் மற்றும் வயதில் மூத்த இயலாத நோயாளிகள் பயன்பாட்டிற்கான சக்கர நாற்காலிகளை இலவசமாக வழங்க சங்கத்தினர் சார்பில் முடிவு செய்யப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி ரூ15,000 மதிப்புள்ள 2 சக்கர நாற்காலிகளை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தினர் திங்கள்கிழமை நேரில் இலவசமாக வழங்கினர்.

உடன் இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் பலரும் நேரில் கலந்து கொண்டனர்.    
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.