மானாமதுரை: வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு நிவாரணப் பொருள்கள்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
மானாமதுரை கிழக்கு ஒன்றியம் செய்களத்தூர் கிராமத்திலும் வின்சென்ட் நகரிலும் ஏராளமான ஏழை மக்கள் பிழைப்பு நடத்த வழியின்றி வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்களை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மானாமதுரை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் துரை.ராஜாமணி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் முத்துச்சாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.