தமிழ்நாடு

இ-பதிவு இணையதளம் செயல்படத் தொடங்கியது

DIN

ஊரடங்கு தளர்வையொட்டி காலை முதல் முடங்கியிருந்த இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

சுய தொழில் செய்வோர் ஒரேநேரத்தில் இ-பாஸ் விண்ணப்பிக்க  இணையதளத்தில் குவிந்ததால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியிருந்தது.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதன் காரணமாக, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

கடந்த இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று (ஜூன் 7) தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன்படி கடந்த இரு வாரங்களாக அடைக்கப்பட்டிருந்த மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின.

மின் பணியாளா், பிளம்பா்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவா் மற்றும் தச்சா் போன்ற சுயதொழில் செய்பவா்கள் இணையப் பதிவுடன் பணிபுரியவும் இசைவு அளிக்கப்பட்டிருக்கிறது.

மின்பொருள்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயா்கள் விற்பனைக் கடைகள், சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் செயல்படலாம். 

ஹார்டுவேர் விற்பனைக் கடைகள், வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடைகள், கல்விப் புத்தகங்கள், எழுது பொருள்கள் விற்பனைக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்களில் பயணிகள் இணையப் பதிவுடன் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை ஏராளமானோர் ஒரே நேரத்தில் இ-பதிவு இணையத்தில் விண்ணப்பிக்க நேர்ந்ததால், இ-பதிவு இணையதளம் முடங்கியிருந்தது. தற்போது தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT