கோப்புப்படம் 
தமிழ்நாடு

'இன்று முதல் மாலை 5 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும்'

இன்று முதல் மாலை 5 மணி வரை நியாய விலைக் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு  அறிவித்துள்ளது.

DIN

நியாய விலைக் கடைகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் என அறிவிப்பு செய்யப்பட்டு அது திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நியாய விலைக் கடைகள் காலை 9 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்பட வேண்டும். இந்த வேலை நேரம் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளா் ஆா்.ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.

டோக்கன்கள் விநியோகம்:

கரோனா இரண்டாம் கட்ட நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரமும், 14 பொருள்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் வரும் 15-ஆம் தேதி முதல் அளிக்கப்பட உள்ளது.

இதற்கான டோக்கன்கள் வரும் 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்தப் பணியை மாலையில் மேற்கொள்ள வேண்டுமெனவும், காலை நேரத்தில் நியாய விலைக் கடைகளில் பொருள்களை விநியோகம் செய்ய வேண்டுமெனவும் உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி, ஜெமிமா, ராதாவுக்கு தலா ரூ. 2.25 கோடி; பயிற்சியாளருக்கு ரூ. 22.5 லட்சம்! - மகாராஷ்டிர அரசு

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

விஜய் தலைமையில் இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

இந்திய பங்குச் சந்தை இன்று விடுமுறை!

விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பலி!

SCROLL FOR NEXT