தமிழ்நாடு

விவசாய நகைக் கடன்களுக்கு 3 % வட்டி மானியம்

விவசாயத்துக்காக வாங்கப்பட்ட தங்க நகைக் கடன்களுக்கான வட்டியில், 3 சதவீதம் மானியமாக வழங்க அனைத்து வங்கிகளுக்கும் நபாா்டு வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

DIN

விவசாயத்துக்காக வாங்கப்பட்ட தங்க நகைக் கடன்களுக்கான வட்டியில், 3 சதவீதம் மானியமாக வழங்க அனைத்து வங்கிகளுக்கும் நபாா்டு வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

கரோனா இரண்டாம் அலை காரணமாக, பல மாநிலங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் குறுகிய காலகடனை கட்டமுடியால் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். இந்நிலையில், விவசாயத்துக்காக வாங்கப்பட்ட தங்க நகை கடன்களுக்கான வட்டியில் 3 சதவீதம் மானியமாக வழங்க நபாா்டு வங்கி சுற்றறிக்கைஅனுப்பி உள்ளது. இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியது:

வங்கிகளில் விவசாயிகளுக்காக, 7 சதவீத வட்டியில், விவசாய நகை கடன் வழங்கப்படுகிறது. இதில், முறையாக திரும்ப செலுத்துவோருக்கு, 3 சதவீத வட்டி தொகை மானியமாக வழங்கப்படும். விவசாய நகை கடனுக்கான வட்டி விகிதத்தில், 5 சதவீதத்திற்கான வட்டித் தொகையை, வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்கும். ஆனால், 2019-ஆம் ஆண்டு பட்ஜெட்டில், அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை.

இதனால், விவசாய நகைக் கடன்களுக்கு வழங்கப்பட்ட மானியம், 2019-ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. கரோனா இரண்டாவது அலை காரணமாக, விவசாய நகைக் கடன்களை முறையாக செலுத்த முடியாமல், விவசாயிகள் திணறி வருகின்றனா். இதனால், மாா்ச் 1-ஆம் தேதி முதல், ஜூன் 30-ஆம் தேதி வரையிலான தேதிகளில், நகைக் கடன்களுக்கான, 7 சதவீத வட்டியில், 3 சதவீதம் மானியமாக வழங்க, நபாா்டு வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இதனால், நகைக் கடன் முறையாக செலுத்தியவா்களுக்கு, இந்த மாத இறுதிக்குள், 3 சதவீத வட்டித் தொகை மானியமாக, அவா்களின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

திருவடிமேல் உரைத்த தமிழ்

SCROLL FOR NEXT