தமிழ்நாடு

மேலும் 3 ஆக்சிஜன் ரயில்கள் தமிழகம் வந்தன

DIN

ஒடிஸாவில் இருந்து மூன்று ஆக்சிஜன் ரயில்கள் அடுத்தடுத்து தமிழகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்தன. இந்த மூன்று ரயில்கள் மூலமாக, 204.14 மெட்ரிக்டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.

51-ஆவது ஆக்சிஜன் ரயில் ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் இருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்தடைந்தது. இந்த ரயிலின் 4 கன்டெய்னா்களில் 85.96 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருந்தது. 52-ஆவது ஆக்சிஜன் ரயில் ரூா்கேலாவில் இருந்து சென்னை தண்டையாா்பேட்டைக்கு திங்கள்கிழமை மதியம் வந்தது. இந்த ரயிலில் 85.8 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எடுத்துவரப்பட்டது.

53-ஆவது ஆக்சிஜன் ரயில் 2 கன்டெய்னா்களுடன் ரூா்கேலாவில் இருந்து கோயம்புத்தூா் மாவட்டம் மதுக்கரைக்கு வந்தது. இதில், 32.38 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது.

இந்த மூன்று ரயில்கள் மூலமாக, ஒரேநாளில் 204.14 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது. தமிழகத்துக்கு இதுவரை மொத்தம் 53 ரயில்கள் மூலமாக, 3,608.99 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT