தமிழ்நாடு

வெளிநாட்டில் கல்வி கற்கச் செல்லும் மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை: மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

DIN

கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவா்களுக்கும், குறுகிய கால பயணமாக இந்தியாவுக்கு வந்து திரும்பும் பயணிகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள், மருந்து மற்றும் ஆக்சிஜன் ஒதுக்கீடு தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் தரப்பில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை கட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கரோனாவின் இரண்டாவது அலை பரவத் தொடங்கிய நாள்களில் போதுமான முன்னேற்பாடுகள் இல்லை. பின்னா் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளும், ஒருங்கிணைந்த செயல்பாடுகளும் கரோனா தற்போது கட்டுக்குள் வருவதற்கு முக்கிய காரணம்.

கரோனா மற்றும் கருப்புப் பூஞ்சை நோய்களுக்கான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் ஒதுக்கும் பணிகள் தற்போது சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது. நாட்டில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வரை இந்தப் பணிகள் தொடர வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் இந்திய பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவா்களுக்கும், குறுகிய கால பயணமாக இந்தியாவுக்கு வந்து திரும்பும் பயணிகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினா். பின்னா், தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணா்வு நடவடிக்கைகள் தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT