முகப்பு
தமிழ்நாடு

காட்டு யானை தாக்கி பழங்குடியின வாலிபர் உயிரிழப்பு

கோத்தகிரி வனச்சரக பகுதியில் காட்டு யானை தாக்கி பழங்குடி இன வாலிபர் உயிரிழந்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:21 AM
ராஜ்குமாரின்  உடல் பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு  எடுத்து செல்லப்பட்டது. 
பகிர்:

கோத்தகிரி வனச்சரக பகுதியில் காட்டு யானை தாக்கி பழங்குடி இன வாலிபர் உயிரிழந்தார்.

கோத்தகிரி வனச்சரகத்தில் குஞ்சப்பனை காவல் பகுதிக்குட்பட்ட செம்மனாரையில் வசிக்கும்  ஆதிவாசி இருளர் ராமசாமி  என்பவரின் மகன் ராஜ்குமார்(26). இவர் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் காட்டுயானை தாக்கி இறந்துவிட்டதாக  வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது இரவு சுமார் 7 மணியளவில்  அப்பகுதியில் உள்ள தாலமொக்கை கோவிலுக்கு ராஜ்குமார் சென்று விட்டு செம்மனாரை வீட்டிற்கு செல்ல ரோட்டில் நடந்து வரும்போது புதரில் மறைந்திருந்த காட்டுயானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்  

அப்பகுதியில் பதிந்திருந்த யானையின் கால் தடத்தை வைத்து இச்சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ராஜ்குமாரின்  உடல் பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு  எடுத்து செல்லப்பட்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →