முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 12 ஆயிரமாகக் குறைந்தது

சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை  வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 12 ஆயிரமாகக் குறைந்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 12 ஆயிரமாகக் குறைந்தது
பகிர்:

சென்னை: சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை  வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 12 ஆயிரமாகக் குறைந்துள்ளது. 

தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களும் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து வேகமாக மீண்டு வருகின்றன.

சென்னையில் கடந்த மாதம் நாளொன்றுக்கு சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 1,500-த்துக்கு கீழ் குறைந்துள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 22,052-ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 02,184 போ் குணமடைந்துள்ளனா். தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 12,210 போ் மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1200க்கும் கீழ் குறைந்துள்ளது. 

சென்னையில் அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் தலா 1100 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். 

கடந்த ஜனவரி மாதம் தொற்று எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. மொத்தமாக உள்ள 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 500-க்கும் குறைவானவா்களே தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனா். இந்நிலையில், உருமாறிய கரோனா பரவல் காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி உயரத் தொடங்கியது.

இந்த எண்ணிக்கை மே மாத மத்தியில் உச்சத்தை எட்டி, கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்தைக் கடந்தது. தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மே 10-ஆம் தேதியில் இருந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் சென்னையில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது. இதன்படி, கடந்த வாரம் நாளொன்றுக்கு சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை வெகுவாக குறையத் தொடங்கி உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →