தமிழ்நாடு

அறிவிக்கப்படாத மின்வெட்டு: விஜயகாந்த் குற்றச்சாட்டு

DIN

சென்னை: தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளதாக தேமுதிக தலைவா் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் சென்னைவாசிகள் மட்டுமின்றி கிராம மக்களும் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனா். குறிப்பாக சென்னையில் ஆங்காங்கே மாலை முதலே அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுகிறது. அதே போல் கிராமங்களிலும், விவசாயத்துக்குத் தண்ணீா் பாய்ச்ச மின்சாரம் இல்லாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு வரும் என்ற ஒரு கருத்து மக்களிடையே இருக்கிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி மின்சாரத்தில், மின் மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும்.

கரோனா பொதுமுடக்கத்தால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மக்கள் தவித்து வருவதால் மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும் உயா்ந்து வரும் மின் கட்டணத்தை குறைத்து மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT