முகப்பு
தமிழ்நாடு

திருத்துறைப்பூண்டி: கூட்டுறவு அங்காடியில் கரோனா நிதி, நிவாரணப் பொருள்கள் வழங்கல்

திருத்துறைப்பூண்டி நாகை சாலையில் உள்ள கூட்டுறவு அங்காடியில் இரண்டாம் கட்ட கரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கும்பணி நடைபெற்றது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:24 AM
பகிர்:

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சிங்களாந்தி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் கீழ் உள்ள நாகை சாலையில் உள்ள கூட்டுறவு அங்காடியில் இரண்டாம் கட்ட கரோனா நிவாரண உதவித்தொகை ரூ. 2000 மற்றும் 14 வகையான நிவாரணப் பொருள்கள் வழங்கும் தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இதில் சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 மற்றும் 14 வகையான நிவாரணப் பொருள்கள் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் ராமசுப்பு, கூட்டுறவு சார் பதிவாளர் பிரபாவதி, சிங்களாந்தி கூட்டுறவு வங்கி செயலாளர் வீரசெல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் ஞானமோகன், முன்னாள் நகரமன்றட்ஜ் தலைவர் மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.