செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ஏ.ஆர்.ராகுல்நாத் பொறுப்பேற்றார். 
தமிழ்நாடு

செங்கல்பட்டு: புதிய மாவட்ட ஆட்சியராக ராகுல்நாத் பொறுப்பேற்பு

புதிதாக உதயமாகிய  செங்கல்பட்டு மாவட்டத்தின் 2 ஆவது மாவட்ட ஆட்சியராக ஏ.ஆர்.ராகுல்நாத் புதன்கிழமை பொறுப்பேற்றார்.

DIN


செங்கல்பட்டு: புதிதாக உதயமாகிய  செங்கல்பட்டு மாவட்டத்தின் 2 ஆவது மாவட்ட ஆட்சியராக ஏ.ஆர்.ராகுல்நாத் புதன்கிழமை பொறுப்பேற்றார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் கடந்த 2019 நவம்பர் மாதம் பிரிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தின்  முதல் மாவட்ட ஆட்சியராக அ.ஜான்லூயிஸ் பொறுப்பேற்று கடந்த ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அரசு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த அ.ஜான்லூயிஸ் தமிழக அரசின் உள்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் பொதுத்துறை இணை செயலாளராக இருந்த ஏ.ஆர் ராகுல்நாத் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தின் 2 ஆவது  ஆட்சியராக ராகுல்நாத் புதன்கிழமை பொறுப்பேற்றார். இதுநாள்வரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ஜான் லூயிஸ் புதிய மாவட்ட ஆட்சியரிடம் பொறுப்பை ஒப்படைத்து வாழ்த்துக்களை தெரிவித்துச் சென்றார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT