தமிழ்நாடு

தமிழகம் மின்மிகை மாநிலம் அல்ல: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி(விடியோ)

DIN

தமிழகம் மின்மிகை மாநிலம் என்ற முந்தைய அரசின் கூற்று  தவறானது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்படுவது குறித்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. 

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 

தமிழ்நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களாக அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது பராமரிப்புப் பணிகளை 10 நாள்களுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதன்பின்பு முன்னறிவிப்பின்றி மின்தடை இருக்காது. 

துறையில் ஒரு சிலர் செய்யும் தவறுகளால், மின் கட்டணத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சரியாகக் கட்டணத்தை நிர்ணயிக்காதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். கால அவகாசத்துக்குள் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது. 

கூடுதல் மின் கட்டணம் தொடர்பாக 10 லட்சம் புகார்கள் வந்துள்ளது. புகார்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாத மின்கட்டணம் செலுத்தப்படவில்லை என்றாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT