தமிழ்நாடு

சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரம் ஆனது

DIN


சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து வீட்டிலும், மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,683 பேராகக் குறைந்துள்ளது.

சென்னையில் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,27,835 ஆக உள்ளது. இவர்களில் 5,15,199 பேர் குணமடைந்துவிட்டனர். 4,683 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 1 சதவீதமாகும். 7,953 பேர் பலியாகிவிட்னர்.

அது மட்டுமல்லாமல், சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் 500 ஆகக் குறைந்துள்ளது.

கடந்த மே மாதத்தில் சுமார் 4 ஆயிரம் வரை சென்ற இந்த எண்ணிக்கை தற்போது 500 ஆகக் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் மட்டும் 504 பேர் சிகிச்சையில் உள்ளனர். மற்ற மண்டலங்களில் 500க்கும் குறைவாகவே நோயாளிகள் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT