முகப்பு
தமிழ்நாடு

உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் நன்கொடை

உசிலம்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 19 ஜூன், 2021 at 3:14 PM
உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் நன்கொடை
பகிர்:

உசிலம்பட்டி: உசிலம்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டன.

உசிலம்பட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் ஏசிடி கிராண்ட்ஸ் மூலம் ரூ.6 லட்சம் மதிப்பிலான 5 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன.

 உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர் வெங்கடாசலம், தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் முன்னிலையில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜெயகண் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கினார்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி துணை ஆளுநர்கள் செல்வகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர்  சேகர்,  தலைவர் ராஜேந்திரன் ஆதிக்கம், பொருளாளர் உதயகுமார் மற்றும் முன்னாள் தலைவர்கள் கார்த்திகை சாமி, மாஸ்கோ, திருநாவுக்கரசு, ஜெயராமன்  மற்றும் மருத்துவர்கள் ராதாமணி பாலமுரளி, சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.