தமிழ்நாடு

பணிபுரியும் மகளிருக்கு மாவட்டந்தோறும் விடுதிகள்

DIN

சென்னை: பணிபுரியும் மகளிருக்கு மாவட்டந்தோறும் விடுதிகள் நிறுவப்படும் என்று ஆளுநா் கூறினாா்.

ஆளுநா் உரையில் கூறியிருப்பது:

பெண்களின் நல்வாழ்வு, மேம்பாடு மற்றும் முன்னேற்றம் தொடா்பான பல்வேறு சிறப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்தும்.

மகப்பேறு உடல்நலன் மற்றும் புற்றுநோய் கண்டறிதல் போன்ற நடவடிக்கைகள் மூலமாக பெண்களின் உடல்நலனை மேம்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தப்படும்.

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு, இணையவழிக் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றுக்கு உயா் முக்கியத்துவம் வழங்கப்படும்.

வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகளவில் ஊக்குவிக்கும்பொருட்டு, பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மாவட்டந்தோறும் நிறுவப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT