மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; நீர்மட்டம் சரிவு
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.68 அடியிலிருந்து 89.96 அடியாக சரிந்தது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:58 AM
சேலம்: இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.68 அடியிலிருந்து 89.96 அடியாக சரிந்தது.
அதேவேளையில், அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 605 கன அடியிலிருந்து 686 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 52.60 டிஎம்சி ஆக இருந்தது.
Advertisement
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், நீர்வரத்து அதிகரித்த போதும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.96 அடியாக சரிந்து வருகிறது.
ஒகேனக்கலில் நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக உள்ளது.