முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 6,596 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் புதிதாக 6,596 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:28 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 6,596 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 6,596 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 24,43,415 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 10,432 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 166 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 

இதுவரை மொத்தம் 23,58,785 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 31,746 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 52,884 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் அதிக பாதிப்புகள் பதிவான மாவட்டங்கள்: 

  • கோவை - 793
  • ஈரோடு - 686
  • சேலம் - 472
  • திருப்பூர் - 419
  • சென்னை - 396

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.