முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நீர்மட்டம் சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 89.15 அடியிலிருந்து 88.98 அடியாக சரிந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
கோப்புப்படம்
பகிர்:

சேலம்:  மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 89.15 அடியிலிருந்து 88.98 அடியாக சரிந்தது. 

அதேவேளையில், அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 7, 492 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை  8,035 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 51.49 டிஎம்சி -ஆக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், நீர்வரத்து அதிகரித்த போதும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.98 அடியாக சரிந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →