28 மனைவிகள் முன்னிலையில் 37வது திருமணம் செய்து கொண்ட முதியவர் 
தமிழ்நாடு

மாவட்டங்களுக்கிடையே திருமணத்திற்கு செல்ல புதிய நடைமுறை

தமிழகத்தில் திருமணத்திற்காக வேறு மாவட்டங்களுக்கு செல்ல புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் திருமணத்திற்காக வேறு மாவட்டங்களுக்கு செல்ல புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், ஏற்கனவே மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை 1 - (11 மாவட்டங்கள்)

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்

வகை 2 - (23 மாவட்டங்கள்)

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர்,
திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.

வகை 3 - (4 மாவட்டங்கள்)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்

திருமணத்திற்கு புதிய நடைமுறைகள்

 வகை 2 மற்றும் 3ல் உள்ள மாவட்டங்களுக்கிடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ்/இ-பதிவு இல்லாமல் பயணிக்கலாம்.
 வகை 1-ல் உள்ள மாவட்டங்களுக்கிடையேயும், வகை 2, 3 ஆகியவற்றில் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை-1-ல் உள்ள மாவட்டங்களுக்கும் திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கப்படும். இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணையவழியாக (https://eregister.tnega.org) மணமகன் /மணமகள் அல்லது அவர்களது பெற்றோர் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

வகை-1ல் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை-2, 3-ல் உள்ள மாவட்டங்களுக்கு திருமணத்திற்காக பயணிக்கவும் இ-பாஸ் பெறவேண்டும்.
 திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
 நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட
ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT