முகப்பு
தமிழ்நாடு

கோயில்கள் நாளை திறப்பு:பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் கோயில்கள் திங்கள்கிழமை திறக்கப்பட உள்ள நிலையில், பணியாளா்களுக்கு கரோனா நோய்த் தொற்று பரிசோதனை சனிக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் கோயில்கள் திங்கள்கிழமை திறக்கப்பட உள்ள நிலையில், பணியாளா்களுக்கு கரோனா நோய்த் தொற்று பரிசோதனை சனிக்கிழமை தொடங்கியது. இந்த பரிசோதனை முகாமை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடக்கி வைத்தாா்.

சென்னை பெரம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், கரோனா பரிசோதனை முகாமை அவா் தொடக்கி வைத்தாா். அப்போது அவா் பேசியது:-

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய நான்கு மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ளன. திருக்கோயில்களைத் திறக்க வசதியாக கோயில்களில் பணியாற்றும் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளா்களுக்கும் ஞாயிற்றுக்கிழமைக்குள் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும். கோயில்களைத் தூய்மையான முறையில் பராமரிக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளா் ஜெ.குமரகுருபரன், எழும்பூா் சட்டப் பேரவை உறுப்பினா் பரந்தாமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →