முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,804 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,804 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:31 AM
பகிர்:

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,804 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,804 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,70,678 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் 597 பேருக்கும், ஈரோட்டில் 506 பேருக்கும், சேலத்தில் 318 பேருக்கும், திருப்பூரில் 294 பேருக்கும், சென்னையில் 291 பேருக்கும், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து இன்று மேலும் 6,553 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 23,97,336-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 40,954 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரோனா பாதிப்புக்குள்ளாகி இன்று மேலும் 98 போ் பலியாகினர். 

இதையடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த்தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 32,388-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,60,895 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.