தமிழ்நாடு

சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதிப்பு: 3,555 பேர் சிகிச்சையில்...

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,555 ஆக உள்ளது. 

DIN

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,555 ஆக உள்ளது. 

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களைத் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.  

சென்னை மாநகராட்சி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் 3,555 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 5,31,732 ஆக உள்ளது. இதுவரை கரோனாவுக்கு 8,161 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 5,20,016 பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 27,703 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக அடையாரில் 414 பேரும், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை, அண்ணா நகரில் 300க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!

அரசியலில் களமிறங்கும் சூர்யா? நற்பணி இயக்கம் மறுப்பு!

தவெக மாநாடு: 100 அடி கொடிக் கம்பம் சாய்ந்து கார் சேதம்!

தில்லியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: மூவர் பலி!

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுக்க முடிவு!

SCROLL FOR NEXT