முகப்பு
தமிழ்நாடு

நீட் தேர்வின் தாக்கம்: ஏ.கே.ராஜன் குழு இன்று மாலை ஆலோசனை

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு இன்று மாலை ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:31 AM
நீதிபதி ஏ.கே.ராஜன்
பகிர்:

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு இன்று மாலை ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 89,342 பேர் நீட் தேர்விற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.  

இந்நிலையில், பதிவு செய்யப்பட்ட கருத்துகளை இறுதி செய்வது குறித்து இன்று மாலை 3ஆம் கட்ட ஆலோசனையில் நீதிபதி ஏ.கே.ராஜனின் குழு ஈடுபடவுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →