முகப்பு
தமிழ்நாடு

இந்தியன் 2 திரைப்பட விவகாரம்: மத்தியஸ்தராக நீதிபதி ஆர். பானுமதி நியமனம்

இந்தியன் 2 திரைப்பட விவகாரத்தில் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

சென்னை: இந்தியன் 2 திரைப்பட விவகாரத்தில் லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையிலான பிரச்னைக்குத் தீர்வு காண உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தியன் 2 திரைப்படத்தை முடித்துக் கொடுக்காமல், வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, இயக்குநர் ஷங்கர் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் தடை விதிக்க முடியாது என  மறுத்துவிட்டார். இதனை எதிர்த்து லைகா நிறுவனம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இரு தரப்பும் சமரசமாக செல்ல அறிவுரையும் வழங்கியிருந்தது. ஆனால் இருதரப்பு பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சதீஷ் குமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என இடைக்கால நிவாரணம் கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்தார்.

அதே நேரம், இந்தியன் 2 திரைப்பட விவகாரத்தில் லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையிலான பிரச்னையில் தீர்வு காணும் மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமனம் செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →