கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாமியாரை கொலை செய்த மருமகன்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சின்ன மாமியாரைக் கொன்ற மருமகனை போலீஸார் தேடி வருகின்றனர்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் சின்ன மாமியாரைக் கொன்ற மருமகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது அத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் காசி ஈஸ்வரன் (28). காசி ஈஸ்வரனுக்கும் பெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டிதேவி (20) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. 

இந்நிலையில் காசி ஈஸ்வரன் குடித்துவிட்டு அடிக்கடி வந்து பாண்டி தேவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல் நேற்று இரவு வீட்டு பக்கம் உள்ள டவர் அருகே வைத்து குடித்துவிட்டு பாண்டிதேவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

அப்போது பாண்டிதேவியின் சித்தியும் காசி ஈஸ்வரனின் சின்ன மாமியாரான ராஜலட்சுமி என்பவர் மற்றும் மார்த்தாண்டம் (50) கோவிந்தன் (29) ஆகியோர் தடுக்கச் சென்றனர்.

அப்போது ஆத்திரமடைந்த காசி ஈஸ்வரன் ராஜலட்சுமியை மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அந்த இடத்திலேயே சுருண்டு ராஜலட்சுமி விழுந்து விடுகிறார். மேலும் மார்த்தாண்டம் மற்றும் கோவிந்தனுக்கு காயம் ஏற்பட்டது. மூவரையும் கத்தியால் குத்திவிட்டு காசி ஈஸ்வரன் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார்.

இதற்கிடையே கத்தியால் குத்தப்பட்டு கீழே விழுந்த ராஜலட்சுமியை அவரது கணவர் ராஜேஸ்வரன் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராஜேஸ்வரி இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட ராஜலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்ன மாமியாரை கொலை செய்து மேலும் 2 பேரை கத்தியால் குத்திய காசி ஈஸ்வரனை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் தேடி வருகின்றனர்

இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT