தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.34,112

DIN


சென்னை: சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.176 குறைந்து, ரூ.34,112-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்தநிலையில், கடந்த இரண்டு நாள்களாக விலை குறைந்து வருகிறது. இதன்தொடா்ச்சியாக, சென்னையில் புதன்கிழமை பவுனுக்கு ரூ.176 குறைந்து, ரூ.34,112-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.22 குறைந்து, ரூ.4,264 ஆக இருந்தது. அதேநேரத்தில் வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயா்ந்து, ரூ.72.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயா்ந்து, ரூ.72,800 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,264

1 பவுன் தங்கம்...............................34,112

1 கிராம் வெள்ளி.............................72.80

1 கிலோ வெள்ளி............................72,800

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,286

1 பவுன் தங்கம்...............................34,288

1 கிராம் வெள்ளி.............................71.90

1 கிலோ வெள்ளி.............................71,900

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT