தமிழ்நாடு

தனுஷ்கோடி கடற்கரையில்  1533 ஆமை முட்டைகள் சேகரிப்பு

DIN


ராமேசுவரம்: தனுஷ்கோடி கடற்கரையில் 13 இடங்களில் இருந்து 1533 ஆமை முட்டைகளை வனத்துறையினா் வியாழக்கிழமை கண்டெடுத்து குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்புடன் வைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடற்கரை பகுதிகளில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் முதல் ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிட்டுச் செல்லும். அவற்றை வனத்துறையினா் சேகரித்து குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாத்துவைத்து, குஞ்சு பொறித்தவுடன் மீண்டும் கடலில் விட்டு வருவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி ஆமைகள் முட்டையிடும் காலம் தொடங்கியது.  அதைத் தொடா்ந்து வனத்தறையினா் முட்டைகளை சேகரித்து வருகின்றனா். புதன்கிழமை காலையில் தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை காலையில் 450 ஆமை முட்டைகளை வனத்துறையினா்  சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம், பாரடி உள்ளிட்ட 13 இடங்களில் 1533 ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்புடன் வைத்தனர்.

தற்போது வரையில் 9747 ஆமை முட்டைகள் குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்புடன் உள்ளதாக வனத்துறை அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT