உயர்நீதிமன்றம் 
தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தள்ளுபடி

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு முரணாக மெரீனாவில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

DIN


சென்னை: கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு முரணாக மெரீனாவில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சமுக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனுவில், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில், அவரது நினைவிடம் கட்டப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் விதிகளின் படியும், உயர்நீதிமன்ற உத்தரவுகளின் படி கடற்கரை இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் எந்த வித கட்டுமானங்களை மேற்கொள்ள கூடாது. 

எனவே, இந்த நினைவிடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய தனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சத்திகுமார் சுகுமார குருப் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்குகளை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டதாக  தெரிவிக்கப்பட்டது. 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

SCROLL FOR NEXT